ஐபிஎல்-2020

கொல்கத்தாவை 149 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய பஞ்சாப்

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தாவுக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. கடந்த ஆட்டத்தில் அசத்திய நிதிஷ் ராணா ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் ஓவரிலேயே கிளென் மேக்ஸ்வெல்லிடம் வீழ்ந்தார். 2-வது ஓவரை வீசிய முகமது ஷமி திரிபாதி (7), தினேஷ் கார்த்திக் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், கொல்கத்தா 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.

இதையடுத்து, ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் இயான் மார்கன் அதிரடி காட்டி நெருக்கடியை பஞ்சாப் பக்கம் திருப்பினர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 9-க்கு மேல் இருந்தது. பவர் பிளே முடிவில் கொல்கத்தா 54 ரன்களை எட்டியது. இருவரும் தொடர்ந்து மிரட்டி வந்ததால், பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இக்கட்டான நிலையில், மார்கன் 40 ரன்களுக்கு பிஷ்னாய் சுழலில் ஆட்டமிழந்தார். இந்த இணை 47 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தது.
 
இதன்பிறகு, கொல்கத்தா இன்னிங்ஸில் அதிரடி தென்படவில்லை. கில் மட்டும் நம்பிக்கையளித்து வந்தார். அரைசதம் அடித்த கில் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், அவர் 57 ரன்களுக்கு ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

பெர்குசன் மட்டும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 

பஞ்சாப் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டன் மற்றும் பிஷ்னாய் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT