ஐபிஎல்-2020

தொடர்ச்சியாக 5-வது வெற்றி: பிளே ஆஃப்புக்கு விடாது போராடும் பஞ்சாப்!

26th Oct 2020 10:59 PM

ADVERTISEMENT

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தன.

கொல்கத்தா பேட்டிங்: கொல்கத்தாவை 149 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய பஞ்சாப்

150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். மந்தீப் ரன் குவிக்க திணறியதால், ராகுல் துரிதமாக ரன் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. இதன்பிறகு, மந்தீப்பும் ரன் எடுக்கத் தொடங்கியதால், இருவரும் பாட்னர்ஷிப் அமைத்தனர். பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, வருண் சக்கரவர்த்தி சுழலில் ராகுல் (28 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கிறிஸ் கெயில் வருண் மற்றும் சுனில் நரைன் பந்துகளில் சிக்ஸர்களைப் பறக்கவிட வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 8-க்கு வந்தது. 

ADVERTISEMENT

மந்தீப்பும் கெயிலுடன் பாட்னர்ஷிப் அமைக்க, ஆட்டம் கொல்கத்தாவிடம் இருந்து நழுவியது. மந்தீப் சிங் 49-வது பந்திலும், கெயில் 25-வது பந்திலும் அவர்களது அரைசதத்தை எட்டினர். இதன்பிறகு, பவுண்டரிகள் பறக்க வெற்றிக்குத் தேவையான ஓவருக்கு 6-க்கு கீழ் குறைந்தது.

கடைசி 2 ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பெர்குசன் பந்தில் கெயில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, நிகோலஸ் பூரனும், மந்தீப் சிங்கும் வெற்றியை உறுதி செய்தனர்.

18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் தொடர்ச்சியாக பெறும் 5-வது வெற்றி.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த 56 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT