ஐபிஎல்-2020

ராஜஸ்தான் வெற்றியால் ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே வெளியேறியது எப்படி?

26th Oct 2020 12:04 PM

ADVERTISEMENT

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை ராஜஸ்தான் தோற்கடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

துபையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

அடுத்து அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றாலும் ராஜஸ்தானின் வெற்றியால் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

எப்படி?

புள்ளிகள் பட்டியலில் மும்பை, தில்லி, பெங்களூர் அணிகள் 11 ஆட்டங்கள் விளையாடி 14 புள்ளிகள் பெற்றுள்ளன. 

சென்னை அணியால் மீதமுள்ள இரு ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் தான் பெற முடியும்.

கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளும் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் முறையே 11, 12 ஆட்டங்களில் விளையாடி தலா 10 புள்ளிகளும் ஹைதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 புள்ளிகளும் பெற்றுள்ளன.

மீதமுள்ள ஆட்டங்களில் முடிவுகள் எப்படி அமைந்தாலும் ஏதாவதொரு அணி 14 புள்ளிகள் பெற்றுவிடும். கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இந்த வாரம் ஒன்றுக்கொன்று மோதவுள்ளன. இதனால் ஏதாவது ஒரு அணி 14 புள்ளிகள் எடுக்க வாய்ப்புண்டு. இதனால் குறைந்தது 4 அணிகளாவது 14 புள்ளிகளுடன் இருக்கும். ஆனால் சிஎஸ்கே மீதமுள்ள இரு ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணியால் 14 புள்ளிகளைப் பெற முடியாது. இதனால் சிஎஸ்கே அணி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாததால் அதன் ரசிகர்கள் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளார்கள்.  

Tags : dhoni IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT