ஐபிஎல்-2020

தோனியின் பாராட்டு மழையில் ருதுராஜ்!

25th Oct 2020 09:40 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதை, மிகச் சரியான ஆட்டம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி தெரிவித்ததாவது:

"மிகச் சரியான ஆட்டங்களில் இது ஒன்று. மிகச் சரியாக செயல்படுத்தினோம். சீராக விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். 

நடு ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்பட்டோம். இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்படாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ADVERTISEMENT

நாங்கள் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்று தொடக்கம் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். பெரிய ஷாட்களை ஆடாமல், தன்னால் முடிந்த ஷாட்களை ஆட முயற்சித்து பலம் சேர்த்துக்கொண்டார்.

இதை 2-வது அல்லது 3-வது ஆட்டத்தில் பார்த்திருந்தால் ஒரு கவனம் கிடைத்திருக்கும். ஆனால், ருதுராஜுக்கும் இது கடினமான ஒன்று. அவர் சென்னையில் பேட் செய்தார். அதன்பிறகு கரோனா தொற்று. கூடுதலாக தனிமையிலிருந்ததால், அவரது பொன்னான நேரம் வீணானது. இன்று, முதல் ரன்னை எடுத்தபிறகு ஒவ்வொரு ரன்னை எடுத்தபோதும் அவர் இயல்பாக உணரத் தொடங்கினார்."

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT