ஐபிஎல்-2020

ஸ்டோக்ஸ் செஞ்சுரி: மும்பையை பந்தாடிய ராஜஸ்தான்

25th Oct 2020 11:22 PM

ADVERTISEMENT

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் 45-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்கள் குவித்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் களமறங்கினர். 11 பந்துகளில் 13 ரன்கள் அடித்த உத்தப்பா போலார்ட் கேட்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் 8 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

எனினும் களத்தில் நின்ற ஸ்டோக்ஸ் தனது அதிரடியை காட்டினார். அவருக்கு பக்கபலமாக சஞ்சு சாம்சனும் தனது பங்குக்கு பந்துகளை பவுண்டரிக்கு தள்ளினார். இந்த கூட்டணியைக் கண்டு திணறிய மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறினர்.

இறுதியாக 12 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி காட்டி வந்த ஸ்டோக்ஸ் 18ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அதனைத் தொடர்ந்து 4 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் மற்றும் 31 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பையைப் பொருத்த வரையில் பாட்டின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Tags : IPL2020
ADVERTISEMENT
ADVERTISEMENT