ஐபிஎல்-2020

20 பந்துகளில் அரைசதம்: பாண்டியா விளாசலில் 195 ரன்கள் குவித்த மும்பை

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 45-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ரோஹித் இல்லாததால் குயின்டன் டி காக்குடன் இஷான் கிஷன் களமிறங்கினார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் மிரட்டலான சிக்ஸர் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே டி காக் போல்டானார்.

இதன்பிறகு, கிஷன் மற்றும் சூர்யகுமார் பாட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன் சரியான டைமிங் கிடைக்காமல் விளையாட, ரன் ரேட் பொறுப்பை சூர்யகுமார் எடுத்துக் கொண்டார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 8-க்கு மேல் இருந்து வந்தது. 10 ஓவர் முடிவில் மும்பை 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 89 ரன்கள் எடுத்தது.

11-வது ஓவரிலிருந்து மும்பைக்கு சரிவு ஏற்படத் தொடங்கியது. கார்த்திக் தியாகி வீசிய 11-வது ஓவரில் ஆர்ச்சரின் அட்டகாசமான கேட்ச்சால் கிஷன் (37 ரன்கள்) ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் கோபால் வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் சூர்யகுமார் (40 ரன்கள்) ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பொலார்ட் (6 ரன்கள்) ஆட்டமிழந்தார். குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது.

இதனால், 10 முதல் 16-வது ஓவர் வரை மும்பை அணி 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில் 17-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரில் சௌரப் திவாரி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடிக்க 17 ரன்கள் கிடைத்தன. 18-வது ஓவரை ராஜ்புத் வீசினார். அந்த ஓவரில் ஹார்திக் பாண்டியா 2-வது பந்தில் சிக்ஸர், 4, 5 மற்றும் 6-வது பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் என மொத்தம் 4 சிக்ஸர்களை விளாச அதில் மட்டும் 27 ரன்கள் கிடைத்தன.

எனினும், 19-வது ஓவரை ஆர்ச்சர் சிறப்பாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து திவாரி (34 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். 

ஆனால், பாண்டியா கடைசி ஓவரில் மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கினார். 2-வது பந்தை சிக்ஸருக்கும், அடுத்த 2 பந்துகளை பவுண்டரிக்கும் விளாசி மிரட்ட, 5-வது பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதன்மூலம், 20-வது பந்தில் அவர் அரைசதத்தை எட்டினார். எனினும் அவர் கடைசி பந்தையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதனால், கடைசி ஓவரிலும் 27 ரன்கள் கிடைத்தன.

கடைசி 4 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 74 ரன்கள் குவித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்கள் குவித்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், ஷ்ரேயஸ் தலா 2 விக்கெட்டுகளையும், தியாகி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT