ஐபிஎல்-2020

பவர்பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்

DIN

சிஎஸ்கே அணி பவர்பிளே பகுதியில் மிக மோசமாக விளையாடியதால் அப்போதே ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது என அந்த அணியின் பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தோ்வு செய்தது. சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சோ்த்தது. சாம் கரன், 47 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 18 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பை அணியில் டி காக் - இஷன் கிஷான் இணை அபாரமாக ஆடியது. மும்பை அணி 12.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இஷன் கிஷான் 37 பந்துகளில் 5 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 68, டி காக் 37 பந்துகளில் 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியைச் சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் பெரிய வித்தியாசத்தில் வென்று இதர நான்கு அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுக்காமல் இருந்தால் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் இந்தச் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.

சிஎஸ்கேவின் மோசமான தோல்வி பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

நாங்கள் நிஜமாகவே அதிர்ந்துவிட்டோம். மோசமான பவர்பிளே அது. மிக விரைவாகவும் அடிக்கடியும் விக்கெட்டுகளை இழந்ததால் இந்த ஆட்டம் பவர்பிளேயிலேயே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எனவே டைம் அவுட் பகுதியின்போது இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்களை அறிவுறுத்தினோம். இதன்மூலம் வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களால் பலம் கூடியுள்ள எங்கள் பந்துவீச்சுக்குப் பாதி வாய்ப்பாவது கிடைக்கும் என எண்ணினோம். எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளரான தாஹிர் அணியில் இருக்கும்போது அவரை விளையாட வைக்க எண்ணினோம். ஆனால் மோசமான பேட்டிங்கினால் தோற்றுவிட்டோம். நாங்கள் முயற்சி செய்த அனைத்தும் எதிராக அமைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT