ஐபிஎல்-2020

தமிழக வீரர் சுழலில் சிக்கியது தில்லி: வருண் 5 விக்கெட்டுகள்

DIN


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் விளைவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா பேட்டிங்: நடு ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ராணா, நரைன்: கொல்கத்தா அணி 194 ரன்கள் குவிப்பு

தில்லி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அஜின்கயா ரஹானே (0) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பேட் கம்மின்ஸ். தனது அடுத்த ஓவரிலேயே தவான் (6) விக்கெட்டையும் வீழ்த்தினார் கம்மின்ஸ்.

இதையடுத்து, கேப்டன் ஷ்ரேயஸ் மற்றும் ரிஷப் பந்த் இணைந்தனர். இந்த இணை பாட்னர்ஷிப் அமைத்தாலும், பெரிதளவு அதிரடி காட்டவில்லை. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 13-க்கு மேல் உயரத் தொடங்கியது. முதல் 10 ஓவர்களில் தில்லி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், 12-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தினார் மார்கன். முதல் ஓவரிலேயே பந்த் (33 பந்துகளில் 27 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார் வருண். மீண்டும் 14-வது ஓவரை வீசிய வருண், முதல் பந்தில் ஷ்ரேயஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்தில் ஷிம்ரோன் ஹெத்மயர் (10) விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த பந்தில் ஷ்ரேயஸ் (38 பந்துகளில் 47 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மீண்டும் 16-வது ஓவரை வீசிய வருண் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸையும் (6), 5-வது பந்தில் அக்சர் படேலையும் (9) விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்மூலம், நடப்பு சீசனில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

வருணின் ஓவர்களால் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

19-வது ஓவரில் ககிசோ ரபாடாவும், கடைசி ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வருண் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பெர்குசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT