ஐபிஎல்-2020

எல்லா புகழும் மெக்கலத்துக்கே: நரைன் முடிவு பற்றி மார்கன்

DIN


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பயிற்சியாளர் மெக்கலத்தின் யோசனை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, தில்லி அணிகள் மோதின. இதில் நிதிஷ் ராணா (53 பந்துகளில் 81 ரன்கள்), சுனில் நரைன் (32 பந்துகளில் 64 ரன்கள்) மற்றும் வருண் சக்கரவர்த்தியின் (5 விக்கெட்டுகள்) சிறப்பான ஆட்டத்தால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது வீரராக கேப்டன் இயான் மார்கனுக்குப் பதில் சுனில் நரைன் களமிறக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பற்றி மார்கன் கூறியதாவது:

"அது பயிற்சியாளரின் முடிவு. எல்லா புகழும் பிரெண்டன் மெக்கலத்துக்கே சேரும்."

முன்கூட்டியே களமிறக்கப்பட்ட நரைன், ராணாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT