ஐபிஎல்-2020

கடைசிக்கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

24th Oct 2020 02:12 PM

ADVERTISEMENT

 

சிஎஸ்கே அணியைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தோ்வு செய்தது. சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சோ்த்தது. சாம் கரன், 47 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 18 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

ADVERTISEMENT

பின்னா் ஆடிய மும்பை அணியில் டி காக் - இஷன் கிஷான் இணை அபாரமாக ஆடியது. மும்பை அணி 12.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இஷன் கிஷான் 37 பந்துகளில் 5 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 68, டி காக் 37 பந்துகளில் 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அடுத்த பத்து நாள்களில் லீக் சுற்று முடிவடையவுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி கடைசிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  மும்பை  10  7  3  14  +1.448
 2.  தில்லி  10  7  3  14  +0.774
 3.  பெங்களூர்  10  7  3  12  +0.182
 4.  கொல்கத்தா  10  5  5  10  -0.828
 5.  ஹைதராபாத்   10  4  6  8  +0.092
 6.  பஞ்சாப்  10  4  6  8  -0.177
 7.  ராஜஸ்தான்   11  4  7  8  -0.620
 8.  சென்னை  11  3  8  6  -0.733
Tags : Mumbai IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT