ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஹைதராபாத் அணி!

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. ஹைதராபாதுக்கு இது 4-ஆவது வெற்றி; ராஜஸ்தானுக்கு 7-ஆவது தோல்வி.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் மணீஷ் பாண்டே - விஜய் சங்கா் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினா். மணீஷ் பாண்டே ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. தில்லி 10 7 3 14 +0.774
 2. பெங்களூர் 10 7 3 14 +0.182
 3. மும்பை 9 6 3 12 +1.201
 4. கொல்கத்தா 10 5 5 10 -0.828
 5. ஹைதராபாத் 10 4 6 8 +0.092
 6. பஞ்சாப் 10 4 6 8 -0.177
 7. ராஜஸ்தான்  11 4 7 8 -0.620
 8. சென்னை 10 3 7 6 -0.463

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT