ஐபிஎல்-2020

சிட்னி, கான்பெராவில் இந்தியா - ஆஸி. 

DIN


ஒருநாள் தொடர்கள் நடைபெற வாய்ப்புசிட்னி, அக். 21: இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் கான்பெரா நகரங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 
தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள், 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாட இந்தியா அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. 
முன்னதாக, இந்திய அணி பிரிஸ்பேன் நகருக்கு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு 14 நாள் தனிமைப்படுத்துதலின்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்க முடியாது என குயின்ஸ்லாந்து மாகாண சுகாதாரத்துறை தெரிவித்து விட்டது. 
இந்நிலையில், இந்திய அணி சிட்னி நகருக்கு வரவழைக்கப்பட்டு அங்கு 14 நாள் தனிப்படுத்தப்பட இருப்பதாகவும், அந்த காலகட்டத்தின்போதே அவர்கள் பயிற்சி மேற்கொள்ள சிட்னி நிர்வாகம் அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும் "இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ' தகவல் வெளியிட்டுள்ளது. 
அதேபோல், ஒருநாள் தொடர்களின் 6 ஆட்டங்களில் (50 ஓவர் மற்றும் டி20 உள்பட) 4 ஆட்டங்கள் சிட்னி நகரிலும், 2 ஆட்டங்கள் கான்பெராவிலும் நடைபெற வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்டூவர்ட் அயர்ஸ், "சிட்னி வரும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியினரை தனிமைப்படுத்துவது மற்றும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசை அணுகியுள்ளது. இதுதொடர்பாக மாகாண சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்' என்று கூறியதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தெரிவித்துள்ளது. 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நியூ சவுத் வேல்ஸ் அரசு ஏற்கும் பட்சத்தில், போட்டிக்கான மாற்று அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தயாரித்து பிசிசிஐ ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT