ஐபிஎல்-2020

இன்னும் பொறுப்புடன் விளையாட வேண்டும்

DIN

துபை: பிளே-ஆஃப் சுற்று நெருங்கிவரும் நிலையில் இன்னும் பொறுப்பாக ஆட வேண்டும் என்று எண்ணுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறினார். 
தகுந்த ஃபார்முடனும் பேட்டிங், பெளலிங் என அனைத்திலும் வலுவுடனும் இருக்கும் டெல்லி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும், கடந்த ஆட்டத்தில் கிங்ஸ்ல் லெவன் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 
துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது. 
ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ஷ்ரேயஸ் ஐயர், "இந்தத் தோல்வி எங்களுக்கான எச்சரிக்கை. போட்டி முக்கியமான தருணத்தை நோக்கிச் செல்லும் நிலையில் இன்னும் கடினமான ஆட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தனை நாள்களைப் போல் இனியும் நன்றாக ஆடுவது அவசியம். பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடுவதும் முக்கியம். பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி தேவை. எனவே, தற்போது ஒரு ஆட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்' என்றார். 
பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், "ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மூத்த பந்துவீச்சாளராக தனது பணி என்ன என்பதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அவரது பெளலிங் இளம் வீரர்களுக்கு ஊக்கம், அனுபவம் அளிக்கிறது. மேக்ஸ்வெல் ஃபார்முக்கு திரும்புவது மகிழ்ச்சி. இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என உணர்ந்துள்ளோம். அதற்கேற்றவாறு செயல்படுவோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT