ஐபிஎல்-2020

கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது பெங்களூர்

DIN


அபுதாபி: ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸ வீழ்த்தியது. 
அபுதாபியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுத்தது. 85 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வென்றது. 
இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கொல்கத்தாவில் காயமடைந்த ஆன்ட்ரு ரஸ்ùஸலுக்குப் பதிலாக டாம் பேன்டனும், ஷிவம் மாவிக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டிருந்தனர். பெங்களூரில் ஷாபாஸ் அகமதுக்குப் பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். 
டாஸ் வென்ற கொல்கத்தா பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் - ராகுல் திரிபாதி கூட்டணி களம் கண்டது. முகமது சிராஜ் வீசிய 2-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். 5 பந்துகளை சந்தித்திருந்த அவர் 1 ரன் எடுத்திருந்தார். 
அடுத்து வந்த நிதீஷ் ராணாவும் முதல் பந்திலேயே முகமது சிராஜின் பெளலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து டாம் பேன்டன் களத்துக்கு வந்தார். மறுமுனையில் 6 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்திருந்த ஷுப்மன் கில் அவுட்டாகினார். நவ்தீப் சைனி வீசிய 3-ஆவது ஓவரில் கிறிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 
அவரை அடுத்து தினேஷ் கார்த்திக் ஆட வந்தார். மறுபுறம் 1 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்திருந்த டாம் பேன்டன், முகமது சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் இயான் மோர்கன் சற்று நிலைத்தார். 14 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 4 ரன்களே சேர்த்து வீழ்ந்தார். யுவேந்திர சாஹல் வீசிய 9-ஆவது ஓவரில் அவர் ஸ்டம்ப்பை இழந்தார். 
அடுத்து வந்த பேட் கம்மின்ஸýம் 17 பந்துகளை வீணடித்து 4 ரன்களே சேர்த்தார். சாஹல் வீசிய 13-ஆவது ஓவரில் தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். அடுத்து குல்தீப் யாதவ் களம் காண, மறுமுனையில் 34 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 30 ரன்கள் சேர்த்த இயான் மோர்கன் 16-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 
வாஷிங்டன் சுந்தர் வீசி அவர் விளாச முயன்ற பந்து குர்கீரத் சிங் கைகளில் தஞ்சமானது. கடைசியாக லாக்கி 
ஃபெர்குசன் ஆட வந்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ரன் அவுட் செய்யப்பட்டார். 19 பந்துகளை சந்தித்த அவர் 1 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்திருந்தார்.  இவ்வாறாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களே சேர்த்தது கொல்கத்தா. 16 பந்துகளை சந்தித்த லாக்கி ஃபெர்குசன் 1 பவுண்டரி உள்பட 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் 3, யுவேந்திர சாஹல் 2, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி தலா 1 விக்கெட் சாய்த்தனர். 
பின்னர் தனது இன்னிங்ûஸ தொடங்கிய பெங்களூரில் தேவ்தத் படிக்கல் - ஆரோன் ஃபிஞ்ச் தொடக்க வீரர்களாக வந்தனர். 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் விளாசிய ஃபிஞ்ச், 7-ஆவது ஓவரில் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சை தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து குர்கீரத் சிங் களம் கண்டார். 
மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் சேர்த்திருந்த தேவ்தத் படிக்கல்லும் 7-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, குர்கீரத் சிங்குடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.
 13.3 ஓவர்களில் இலக்கை எட்டியது பெங்களூர். குர்கீரத் 4 பவுண்டரிகள் உள்பட 21, கோலி 2 பவுண்டரிகள் உள்பட 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் லாக்கி ஃபெர்குசன் ஒரு விக்கெட் சாய்த்திருந்தார். 

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா 84/8

இயான் மோர்கன்      30 (34) 
லாக்கி ஃபெர்குசன்     19* (16) 
குல்தீப் யாதவ்     12 (19)
பந்துவீச்சு 
முகமது சிராஜ்    3/8
யுவேந்திர சாஹல்     2/15 
வாஷிங்டன் சுந்தர்     1/14


பெங்களூர் 85/2

தேவ்தத் படிக்கல்     25 (17) 
குர்கீரத் சிங்     21* (26) 
விராட் கோலி    18* (17)
பந்துவீச்சு 
லாக்கி ஃபெர்குசன் - 1/17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT