ஐபிஎல்-2020

'வந்தார்கள் வெளியேறினார்கள்': 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

வந்தார்கள் வெளியேறினார்கள்:

முகமது சிராஜ் வீசிய 2-வது ஓவரின் 3-வது பந்தில் திரிபாதி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா முதல் பந்திலேயே போல்டானார்.

நவ்தீப் சைனி வீசிய 3-வது ஓவரில் கில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், டாம் பாண்டன் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

4-வது ஓவரை வீச மீண்டும் சிராஜ் வந்தார். அவர் இந்த முறை பாண்டன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால், 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள் என்ற மிகவும் மோசமான நிலையில் கொல்கத்தா இருந்தது. இதையடுத்து, கேப்டன் இயான் மார்கனும், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், கார்த்திக்கும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திணறி வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 17-வது பந்தில் சஹாலிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து, அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த மார்கன் அணியின் ஸ்கோரை 50-ஐ கடக்கச் செய்தார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் பந்தில் பவுண்டரி அடித்த அவரும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். கொல்கத்தா 57 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்த மார்கன் 34 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால், இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அதிரடி ஏதும் இல்லாமல் நிசப்தமாக முடிந்தது. கடைசி ஓவரில் மட்டும் குல்தீப் யாதவ் 1 பவுண்டரி அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT