ஐபிஎல்-2020

இந்தியாவில் டி20 உலகக் கோப்பை: பாக். வீரர்களுக்கான விசாவை ஜனவரிக்குள் ஐசிசி உறுதி செய்ய வேண்டும்

DIN


புது தில்லி: இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கிடைப்பதை வரும் ஜனவரிக்குள்ளாக ஐசிசி உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், இந்தியாவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிப்பதில் சர்ச்சைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில் டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துகிறது. 

அதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அவர்களுக்கான விசா வழங்குவது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் கூறியதாவது: 

சர்வதேச போட்டிகள் ஐசிசியுடன் தொடர்புடையவை. எனவே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு எங்களுக்கான விசா கிடைப்பது தொடர்பாக ஐசிசியிடம் பேசியுள்ளோம். போட்டியில் பங்கேற்க வரும் நாடுகளின் வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு போட்டியை நடத்தும் நாடு விசா மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. 

அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளிட்டோருக்கும் இந்திய விசா வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பிசிசிஐ-யிடம் ஆலோசித்து எங்கள் வீரர்களுக்கு விசா கிடைப்பது தொடர்பாக உறுதியளிக்குமாறு ஐசிசி-யிடம் தெரிவித்துள்ளோம். அதையும் வரும் ஜனவரிக்குள்ளாக உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை எங்களுக்கான விசா கிடைக்காவிட்டால், அதுதொடர்பாக பிசிசிஐ மூலம் இந்திய அரசுடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

உண்மையைப் பேசுவதானால், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதற்கு தற்போதைய நிலையிலோ, சமீபத்திய எதிர்காலத்திலோ வாய்ப்புகள் இல்லை என்று வாசிம் கான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT