ஐபிஎல்-2020

ஐபிஎல் பாதுகாப்பு வளையம் என்றால் என்ன? பிரீத்தி ஜிந்தா விளக்கம்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனையின் ராணியாகிவிட்டதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். அவரும் அணி வீரர்களுடன் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். 

பாதுகாப்பு வளையம் பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் விடியோ பதிவிட்டுள்ளார். அதில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அவர், தான் கரோனா பரிசோதனையின் ராணியாகிவிட்டதாகவும், இது தனது 20-வது கரோனா பரிசோதனை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த விடியோவுடன் பாதுகாப்பு வளையத்தின் அனுபவம் பற்றியும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

"ஐபிஎல் பாதுகாப்பு வளையம் என்றால் என்னவென்று என்னிடம் நிறைய பேர் கேட்டனர். பாதுகாப்பு வளையம் 6 நாள்கள் தனிமையில் தொடங்கும். 3 முதல் 4 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதுதவிர அறையைவிட்டு வெளியே செல்லக் கூடாது. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்கும், உடற் பயிற்சிக் கூடத்திற்கும் மட்டுமே செல்ல வேண்டும். மைதானத்துக்கு நமது காரில்தான் செல்ல வேண்டும்.

ஓட்டுநர்கள், சமைப்பவர்கள் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு வளையத்திலும் தனிமையிலும்தான் உள்ளார்கள். அதனால், வெளியிலிருந்து உணவு வாங்கக் கூடாது. யாருடனும் கலந்துரையாடக் கூடாது. என்னைப்போன்று சுதந்திரப் பறவையாக இருந்தால் இது மிகவும் கடினமானது. ஆனால், இது 2020. பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் நடைபெறுவதைப் பாராட்ட வேண்டும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT