ஐபிஎல்-2020

200 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடும் முதல் வீரர்: தோனியின் புதிய சாதனை

DIN

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இது அவருடைய 200-வது ஆட்டம். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்களில் விளையாடியுள்ள முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடி வருகிறார். 2016, 2017 ஆண்டுகளில் புணே அணிக்காக விளையாடினார். மற்றபடி அனைத்து ஆண்டுகளிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார்.

தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் ரோஹித் சர்மா. அவர் இதுவரை 197 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஐபிஎல்: தோனி

ஆட்டங்கள் - 199
ரன்கள் - 4568
அதிகபட்ச ரன்கள் - 84*
சராசரி - 41.52
ஸ்டிரைக் ரேட் - 137.67
அரை சதங்கள் - 23 
பவுண்டரிகள் - 306
சிக்ஸர்கள் - 215

- ஒரு கேப்டனாக 3 ஐபிஎல் கோப்பைகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT