ஐபிஎல்-2020

சென்னை திணறல் பேட்டிங்: ராஜஸ்தானுக்கு 126 ரன்கள் இலக்கு

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரண் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 1 பவுண்டரி மட்டுமே அடித்து 10 ரன்களுக்கு ஆர்ச்சர் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷேன் வாட்சன் முதல் 2 பந்துகளில் பவுண்டரி அடித்து 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

கரணும் இந்த ஆட்டத்தில் பெரிதளவில் டைமிங் கிடைக்காமல் நிதானம் காட்டியதால் ரன் ரேட் பெரிதளவு உயரவில்லை. 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த அவர் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே அம்பதி ராயுடுவும் 13 ரன்களுக்கு (19 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 56 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் நிலையிலிருந்தது. கேப்டன் தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த பாட்னர்ஷிப்பில் பெரிதளவு பவுண்டரிகள் போகாததால், ரன் ரேட் 6-க்குக் கீழ் இருந்து வந்தது. இதனால், 17-வது ஓவரில்தான் சென்னை அணி 100 ரன்களை எட்டியது. 

இருவரும் நீண்ட நேரம் களத்திலிருந்ததால் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி 18-வது ஓவரில் 2-வது ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். 200-வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்கிய தோனி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, ஜடேஜாவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். 19-வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் கிடைத்தன. கடைசி ஓவரில் பவுண்டரி எதுவும் போகவில்லை. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

ஜடேஜா 30 பந்துகளில் 35 ரன்களுடனும், ஜாதவ் 7 பந்துகளில் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவாதியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT