ஐபிஎல்-2020

பட்லர் அதிரடி அரைசதம்: சென்னை படுதோல்வி

DIN


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

126 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். ஸ்டோக்ஸ் துரிதமாக ரன் சேர்க்க 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். இதையடுத்து, தீபர் சஹார் வீசிய 3-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 19 ரன்களுக்கு போல்டானார்.

அடுத்த ஓவரில் உத்தப்பா 4 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

சஹார் வீசிய 5-வது ஓவரில் சாம்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால், ராஜஸ்தான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மித் மிகவும் நிதானமாக விளையாட, மறுமுனையில் பட்லர் பவுண்டரிகளாக அடித்து விளையாடி வந்தார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 7-ஐத் தொடவில்லை. பந்துவீச்சாளர்களை மாற்றியும் சென்னைக்குப் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, ஷர்துல் தாக்குர் வீசிய 12-வது ஓவரில் பட்லர் அதிரடிக்கு மாறினார். அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க 13 ரன்கள் கிடைத்தன. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 6-க்குக் கீழ் குறைந்தது. இதன்பிறகு, பியூஷ் சாவ்லா வீசிய 15-வது ஓவரில் பட்லர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தன. அதேசமயம் பட்லரும் அரைசதத்தைக் கடந்தார்.

இதனால், கடைசி 5 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. சாவ்லா வீசிய 17-வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்கப்பட ராஜஸ்தானுக்கு 12 ரன்கள் கிடைத்தன. 3 ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ராஜஸ்தான் 18-வது ஓவரில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்களும், ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT