ஐபிஎல்-2020

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் வெளிநாட்டு வீரர்: வார்னர் புதிய மைல்கல்

18th Oct 2020 10:24 PM

ADVERTISEMENT


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 10-வது ரன்னை எடுத்த வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். அதேசமயம், 5,000 ஐபிஎல் ரன்களைக் கடக்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

மேலும் குறைந்த இன்னிங்ஸில் 5,000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் வார்னர் படைத்துள்ளார். அவர் இந்த மைல்கல்லை 135-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.

ADVERTISEMENT

5,000 ஐபிஎல் ரன்களைக் கடந்த வீரர்கள்:

விராட் கோலி - 5,759

சுரேஷ் ரெய்னா - 5,368

ரோஹித் சர்மா - 5,149
 

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT