ஐபிஎல்-2020

ஐபிஎல்: கடந்த ஏழு ஆட்டங்களாக ஏமாற்றத்தைத் தரும் சஞ்சு சாம்சன்!

17th Oct 2020 05:40 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சனுக்கு 25 வயது தான் ஆகிறது. அதற்குள் பல்வேறு ஏற்ற இறக்கங்களை தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பார்த்துவிட்டார். 

இந்திய அணிக்காக 4 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 2013-லில் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். 102 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடினாலும் ஒரு வருடம் மட்டும்தான் 400 ரன்களைக் கடந்துள்ளார். 2018-ல் அதிகபட்சமாக 3 அரை சதங்கள் எடுத்தார். இதர வருடங்களில் 2 அரை சதங்களுக்கு மேல் எடுத்ததில்லை. கடந்த வருடம் ஒரு சதம் மட்டுமே அடித்தார். அரை சதமும் ஒன்றுகூட இல்லை. 

இந்த வருடம் ஐபிஎல் போட்டியை அமர்க்களமாகத் தொடங்கினார் சஞ்சு சாம்சன். சிஎஸ்கேவுக்கு எதிராக 74 ரன்களும் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 85 ரன்களும் எடுத்தார். இதனால் இந்த வருடம் புதிய வருடமாக இருக்கப் போகிறது, அசத்தப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ADVERTISEMENT

ஆனால் கடந்த ஏழு ஆட்டங்களில் ஒருமுறை கூட 30 ரன்களை சஞ்சு சாம்சன் கடக்கவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கை ஏற்படுத்திய சஞ்சு சாம்சன், சஹால் பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்குக்கும் அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் மற்றுமொரு ஏமாற்றத்தைத் தந்துள்ளார்.

மீதமுள்ள ஆட்டங்களிலாவது சஞ்சு சாம்சன் விஸ்வரூபம் எடுப்பாரா? 

ஐபிஎல் 2020 போட்டி: கடந்த ஏழு ஆட்டங்களில் சஞ்சு சாம்சன்

8(9)
4(3)
0(3)
5(9)
26(25)
25(18)
9(6)

Tags : Sanju Samson
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT