ஐபிஎல்-2020

ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவு: ரபாடா புதிய சாதனை

17th Oct 2020 10:26 PM

ADVERTISEMENT


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தில்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா புரிந்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்ஸி விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன்மூலம், குறைந்த ஆட்டங்களில் 50 விக்கெட்டுகள் என்ற சாதனையை ரபாடா தன்வசப்படுத்தினார்.

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை 32 ஆட்டங்களில் எட்டியதே சாதனையாக இருந்தது. 

ADVERTISEMENT

குறைந்த ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 3 பந்துவீச்சாளர்கள்:

ககிசோ ரபாடா - 27 ஆட்டங்கள்

சுனில் நரைன் - 32 ஆட்டங்கள் 

லசித் மலிங்கா - 33 ஆட்டங்கள்

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT