ஐபிஎல்-2020

ஐபிஎல் வர்ணனையிலிருந்து விலகினார் கெவின் பீட்டர்சன்

17th Oct 2020 12:49 PM

ADVERTISEMENT

 

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்காக ஐபிஎல் போட்டி வர்ணனையிலிருந்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்காக 104 டெஸ்டுகளில் விளையாடியுள்ள கெவின் பீட்டர்சன், ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியின் வர்ணனைக் குழுவில் உள்ள பீட்டர்சன், சொந்தக் காரணங்களுக்காக அதிலிருந்து விலகியுள்ளார். இதுபற்றி பீட்டர்சன் கூறியதாவது:

என் குழந்தைகளுக்கு இது அரையாண்டு விடுமுறைக் காலம். அவர்களுடன் வீட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக ஐபிஎல் வர்ணனையிலிருந்து விலகுகிறேன். பள்ளி விடுமுறை என்பதால் ஒரு நாளில் எல்லா நேரமும் அவர்களுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். ஐபிஎல் கோப்பையை வெல்ல மும்பை, தில்லி, பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : Pietersen IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT