ஐபிஎல்-2020

தெவாதியா எங்களுக்கு சூப்பர் மேன்: ஸ்டோக்ஸ்

14th Oct 2020 08:51 PM

ADVERTISEMENT


ராகுல் தெவாதியா எங்களுக்கு சூப்பர் மேன் போல் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு போட்டி ஒளிபரப்பாளர்களிடம் பென் ஸ்டோக்ஸ் உரையாடினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

"தெவாதியா எங்களுக்கு சூப்பர் மேன் மாதிரி. எங்களது அணியிலிருந்து வியப்பூட்டக்கூடியவராக இருக்கிறார். அவர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். 

ADVERTISEMENT

வெற்றிப் பாதைக்குத் திரும்ப கடந்த ஆட்டத்தில் எங்களுக்கு வெற்றி தேவைப்பட்டது. வரும் ஆட்டங்களிலும் வெற்றியைத் தொடருவோம் என்று நம்புகிறேன். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தைக் குறித்து மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புக்கு நிறைய வெற்றிகள் தேவை. நாங்கள் இருக்கும் நிலை குறித்து எங்களுக்குத் தெரியும். 

சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆடுகளம் வேகத்தன்மையை இழந்து வருகிறது. இந்தத் தொடர் மேலும் நடைபெற, நிறைய ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால் ஆடுகளங்கள் இன்னும் வேகத்தன்மையை இழக்கும். டி20 கிரிக்கெட்டில் முதல் 6 ஓவர்கள் முக்கியமானது. நிறைய விக்கெட்டுகளை வைத்திருந்தால், கடைசி நேரத்தில் நிறைய சேதங்களை ஏற்படுத்த முடியும்."

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT