ஐபிஎல்-2020

ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்: சாம் கரணைப் பாராட்டும் தோனி

14th Oct 2020 11:32 AM

ADVERTISEMENT

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னைக்கு இது 3-வது வெற்றி. ஹைதராபாத்துக்கு 5-வது தோல்வி. 

துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த 29-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே அடித்தது. சென்னை வீரர் ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கி 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் சாம் கரண். இதன்பிறகு மூன்று ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். 

ஆட்டம் முடிந்த பிறகு சாம் கரணின் பங்களிப்பு குறித்து தோனி கூறியதாவது:

சாம் கரண் எங்களுக்கு முழுமையான கிரிக்கெட் வீரராக உள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஓர் அணிக்குத் தேவை. அவர் நன்றாக அடித்து விளையாடுகிறார். தொடக்க வீரராகவும் அவரால் விளையாட முடியும். சுழற்பந்துவீச்சாளர்களையும் நன்கு எதிர்கொள்கிறார். அதிவேகமான 15-40 ரன்களை சாம் கரணால் அடிக்க முடியும். ரன்கள் வேண்டுமென்றால் அவரை முன்கூட்டியே களமிறக்க முடியும். அவரும் அதைச் செய்ய ஆர்வமாக உள்ளார். புதிய பந்தை வீசும்போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் அணிக்குச் சாதகமாக அமைவார் என்றார். 

Tags : dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT