ஐபிஎல்-2020

சூர்யகுமார் யாதவ் அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை

7th Oct 2020 05:37 AM

ADVERTISEMENT

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ûஸ வீழ்த்தியது. 
அபுதாபியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 18.1 ஓவர்களிலேயே 136 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பையின் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் ஆனார். 
இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்புத், கார்த்திக் தியாகி ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். 
டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. வழக்கம்போல் குவிண்டன் டி காக் - கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது. நன்றாக ஆடிய டி காக் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
கார்த்திக் தியாகி வீசிய 5-ஆவது ஓவரில் அவரடித்த பந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கைகளில் தஞ்சமானது. பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். 
இந்நிலையில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் கோபால் வீசிய 10-ஆவது ஓவரில் ராகுல் தெவதியாவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். 
அவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாக, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார். பின்னர் களம் கண்ட கிருணால் பாண்டியா ஒரு சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 
இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது மும்பை. சூர்யகுமார் யாதவ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 79, ஹார்திப் பாண்டியா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயஸ் கோபால் 2, ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட் சாய்த்தனர். 
பின்னர் 194 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத்தொடங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் மட்டுமே அதிக பங்களிப்பு செய்தார். அரைசதம் கடந்த அவர் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 
அடுத்தபடியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 24 ரன்கள் எடுக்க, டாம் கரன் 15, மஹிபால் லோம்ரோர் 11, ஸ்மித் 6, ராகுல் தெவதியா 5, அங்கித் 2, 
ஷ்ரேயஸ் கோபால் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இதனால் 18.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது ராஜஸ்தான். 
மும்பை தரப்பில் பும்ரா 4, டிரென்ட் போல்ட், பட்டின்சன் தலா 2, ராகுல் சாஹர், கிரன் பொல்லார்ட் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்


மும்பை 193/4 

சூர்யகுமார் யாதவ்    79* (47) 
ரோஹித் சர்மா     35 (23)
ஹார்திக் பாண்டியா    30* (19) 

ADVERTISEMENT

ஷ்ரேயஸ் கோபால்    2/28 
ஜோஃப்ரா ஆர்ச்சர்    1/34

ராஜஸ்தான் 136/10 

ஜோஸ் பட்லர்    70 (44) 
ஜோஃப்ரா ஆர்ச்சர்    24 (11) 
டாம் கரன்    15 (16)

ஜஸ்பிரீத் பும்ரா    4/20 
ஜேம்ஸ் பட்டின்சன்    2/19


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT