ஐபிஎல்-2020

விக்கெட் கீப்பிங்கில் அல்ல, பேட்டிங்கில் தான் கே.எல். ராகுல் கவனம் செலுத்த வேண்டும்: லாரா அறிவுரை

7th Oct 2020 02:12 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ராகுல். ஒரு சதம் இரு அரை சதங்களுடன் 302 ரன்கள் எடுத்து அவர் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் கே.எல். ராகுலின் பேட்டிங் பற்றி முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது:

இந்திய அணியில் விளையாடும்போது விக்கெட் கீப்பராகப் பணியாற்றுவது குறித்து கே.எல். ராகுல் கவலைப்படக் கூடாது. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் அணிக்காக நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். 

ADVERTISEMENT

ஒரு வருடத்துக்கு முன்பு கேட்டிருந்தால் ரிஷப் பந்தை நான் மறுத்திருப்பேன். ஆனால் தற்போது ஒரு பேட்ஸ்மேனாகத் தன் பொறுப்பை அவர் உணர்ந்திருக்கிறார். தில்லி அணிக்காக எப்படி விளையாடுகிறார் பாருங்கள். தனது இன்னிங்ஸை முதலில் கட்டமைத்து பிறகு ரன்கள் எடுக்கப் பார்க்கிறார். அவர் இதேபோல விளையாடினால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அவரையே முதலில் தேர்வு செய்யவேண்டும் என்றார். 

Tags : KL rahul Lara
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT