ஐபிஎல்-2020

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ்!

7th Oct 2020 05:25 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூஸிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை பென் ஸ்டோக்ஸ் கவனித்து வந்தாா். இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். கடந்த வார இறுதியில் வந்த ஸ்டோக்ஸ், 6 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது, ராஜஸ்தான் அணியின் அடுத்த ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நாளைய ஆட்டத்தில் ராஜஸ்தானும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 

இதுபற்றி ஒரு பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

என்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக்கொண்டு இங்கு வந்தது அவ்வளவு எளிதல்ல. எங்கள் குடும்பத்துக்கு இது கடினமான காலக்கட்டம். இச்சமயத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளோம். அனைவருடைய சம்மதத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்துள்ளேன் என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT