ஐபிஎல்-2020

ஐபிஎல் 2020: கேப்டன்களின் திட்டங்களை மாற்றும் பூவா தலையா!

1st Oct 2020 04:39 PM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிக வெற்றிகளை அடைந்துள்ளன. ஆனால் டாஸ் வென்ற பெரும்பாலான கேப்டன்கள் 2-வதாக பேட்டிங் செய்வதைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதனால் கேப்டன்களின் முடிவும் ஆட்டத்தின் முடிவும் வேறுபாடு கொண்டதாக அமைந்துள்ளன. 

இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 9 முறை வெற்றி பெற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் மும்பையை சிஎஸ்கே தோற்கடித்தது. பிறகு ஹைதரபாத்தை கொல்கத்தா தோற்கடித்தது. தெவாதியாவின் அதிரடியால் பஞ்சாப்பை ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்த மூன்று ஆட்டங்களில் மட்டுமே முதலில் பந்துவீசிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. மற்றபடி மீதமுள்ள 9 ஆட்டங்களில் முதலில் பந்துவீசிய அணிகளே தோல்வியடைந்துள்ளன.  

ஆனாலும் டாஸ் வென்ற கேப்டன்கள் முதலில் பந்துவீசுவதையே தேர்வு செய்து வருகிறார்கள். 12 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். ஆனாலும் அந்த ஆட்டத்தில் ஹைதராபாத் தோல்வியே அடைந்தது.

ADVERTISEMENT

நேற்றைய ஆட்டத்திலும் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடைசியில் அந்த அணிக்குத் தோல்வி தான் கிடைத்தது. துபையில் நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு வரை நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அவற்றில் இரு ஆட்டங்கள் டை ஆகி சூப்பர் வழியாக முடிவுகள் எட்டப்பட்டன. 

12 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 9 முறை வெற்றி பெற்றும் கேப்டன்கள் ஏன் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்கள்?

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதால் பந்துவீச சிரமமாக உள்ளது. 2-வது பகுதியில் ஆடுகளமும் பேட்டிங்குக்குச் சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் தான் ஒவ்வொருமுறையும் கேப்டன்கள் டாஸை வென்றவுடன் முதலில் பந்துவீசத் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குப் புள்ளிவிவரங்களை விடவும் மைதானத்தின் நிலைமையே முக்கியமானதாக இருக்கும். ஆனாலும் 2-வதாக பேட்டிங் செய்யும் அணிகளால் நினைத்தபடி இலக்கை அடைய முடியாமல் போய்விடுகிறது.

இதனால் டாஸ் வெல்லும் கேப்டன்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பார்கள் என நம்பலாம்.

Tags : kkr batting first
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT