ஐபிஎல்-2020

மும்பை-பஞ்சாப் இன்று மோதல்

DIN


அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வியாழக்கிழமை (அக். 1) மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய நிலையில்,  தலா ஒரு வெற்றியையும், இரு தோல்விகளையும் சந்தித்துள்ளன. இதுதவிர, இரு அணிகளுமே கடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், இந்த ஆட்டத்தில் மோதுகின்றன. அதனால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷான், ஹார்திக் பாண்டியா, கிரண் போலார்ட் என வலுவான பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் இஷன் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்களும்,  போலார்ட் 24 பந்துகளில் 60 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எனினும், மும்பையின் பந்துவீச்சு சற்று கவலையளிப்பதாக உள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் ஜேம்ஸ் பட்டின்சனுக்குப் பதிலாக மெக்லீனாகான் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், சுழற்பந்து வீச்சாளர்களான கிருணால் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோரின் பந்துவீச்சு மும்பையின் வெற்றி வாய்ப்பில் முக்கியப் பங்கு  வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ராகுல் 69 ரன்களும், அகர்வால் 106 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி மும்பை பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரண், சர்ப்ராஸ் கான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய ஷெல்டான் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் கெயில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, ஜேம்ஸ் நீஷம் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் கூட்டணியையும் நம்பியுள்ளது பஞ்சாப்.


மும்பை

(உத்தேச லெவன்): 

ரோஹித் சர்மா (கேப்டன்), 
குவின்டன் டி காக், 
சூர்யகுமார் யாதவ், 
இஷன் கிஷான், ஹார்திக் 
பாண்டியா, கிரண் போலார்ட், 
கிருணால் பாண்டியா, 
ஜேம்ஸ் பட்டின்சன்/மெக்லீனாகான், 
ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட், 
ஜஸ்பிரித் பும்ரா.


பஞ்சாப்

(உத்தேச லெவன்): 

கே.எல்.ராகுல் (கேப்டன்), 
மயங்க் அகர்வால், 
கிளன் மேக்ஸ்வெல், 
நிகோலஸ் பூரண், கருண் நாயர், 
ஜேம்ஸ் நீஷம், சர்ஃப்ராஸ் கான், 
ஷெல்டான் காட்ரெல்/கிறிஸ் கெயில், 
முகமது சமி, 
ரவி பிஷ்னோய், 
முருகன் அஸ்வின்.

இதுவரை...

இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 
அதில் மும்பை 13 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

போட்டி நேரம்: இரவு 7.30                    நேரடி ஒளிபரப்பு:  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT