ஐபிஎல்-2020

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைத் தக்கவைத்துள்ள சிஎஸ்கே!

1st Oct 2020 10:24 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது லீக்  ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது. 

இந்த வருடப் போட்டியில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான், 3-ஆவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 

ADVERTISEMENT

இதுவரை அனைத்து அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி முதலிடத்திலும் கொல்கத்தா அணி 2-ம் இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 தில்லி  3  2  1  4  +0.483
 கொல்கத்தா  3  2  1  4  +0.117
 ராஜஸ்தான்  3  2  1  4  -0.219
 பெங்களூர்  3  2  1  4  -1.450
 பஞ்சாப்  3  1  2  2  +1.498
 மும்பை  3  1  2  2  +0.654
 ஹைதராபாத்  3  1  2  2  -0.228
  சென்னை  3  1  2  2  -0.840
Tags : kkr thumping win
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT