ஐபிஎல்-2020

ஐபிஎல்: கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறினாரா சிஎஸ்கே வீரர்?

1st Oct 2020 03:48 PM

ADVERTISEMENT

 

சிஎஸ்கே வீரர் கே.எம். ஆசிஃப், கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறியதாக வெளியான செய்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.

துபை நட்சத்திர விடுதியில் சிஎஸ்கே வீரர்கள் தற்போது தங்கியிருக்கிறார்கள். தன்னுடைய அறைக்குக் கூடுதல் சாவி வேண்டும் என்பதற்காக கரோனா பாதுகாப்பு வளையத்தை கே.எம். ஆசிஃப் மீறியதாகச் செய்திகள் வெளியாகின. பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே சென்றதால் ஆறு நாள்களுக்கு ஆசிஃப் தனிமைப்பட்டதாக வெளியான செய்திகளை சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

உண்மை விவரங்கள் சரிபார்க்கப்பட்டனவா என்று தெரியவில்லை. லாபியில் வரவேற்பு அறை இருந்தாலும் சிஎஸ்கே அணிக்காகப் பணியாற்றும் ஊழியர்களின் குழு வேறாகும். பொதுப் பணியாளரிடம் எந்தவொரு சிஎஸ்கே வீரரும் சென்று பேச முடியாது. தங்கள் அணிக்காகப் பிரத்யேகமாக ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை வீரர்கள் அறிவார்கள். 

ADVERTISEMENT

தன்னுடைய அறையின் சாவியைத் தொலைத்துவிட்டதால் மாற்றுச் சாவியை ஆசிஃப் கேட்டது உண்மை. அதற்காக அவர் வேறொரு ஊழியரிடம் சென்று கேட்கவில்லை. சிஎஸ்கேவுக்காகப் பணியாற்றும் ஊழியரிடம் சென்றுதான் கேட்டுள்ளார். இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளார்கள். கரோனா வைரஸின் தாக்கம் பற்றி அனைவரும் அறிவார்கள். வீரர்களும் பயிற்சியாளர்களும் தங்கும் இடத்துக்கு நானே செல்வதில்லை. அவர்களுக்குடைய பாதுகாப்பு வளையம் என்பது வேறு. எல்லாவிதமான எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். ஆசிஃப் உள்பட அனைவரும் 14 முறை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். 
 

Tags : CSK bubble
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT