ஐபிஎல்-2020

சவால்களை எதிர்கொள்ளத் தயார்

26th Nov 2020 06:43 AM

ADVERTISEMENT

 

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களின்போது அந்த அணி பெüலர்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தயாராகியிருப்பதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறினார். 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர்கள் வரும் 27-ஆம் தேதி ஒருநாள் தொடருடன் தொடங்குகிறது. 
இந்நிலையில், ஜஸ்டின் லேங்கர் புதன்கிழமை கூறியதாவது: 
உலகத்தரமிக்க பெüலரான ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி கூட்டணியுடன் பெüலிங்கை தொடங்குவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். இந்திய பெüலர்கள் மீது நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம். கடந்த தொடர்களிலும், சமீபத்தில் ஐபிஎல் போட்டியிலும் அவர்களது பந்துவீச்சை அறிந்துகொண்டிருக்கிறோம். 
அத்துடன் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுடன் 14 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளோம். எனவே, இந்திய பெüலர்களின் சவால்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தயாராகவே இருக்கின்றனர். எந்த அணி, எந்த வீரர்களின் வளர்ச்சி எவ்வாறானது என்பதை இதுபோன்ற தொடர்களின் மூலம் அறிய இயலும் என்பது நல்லதாகும். 
இந்திய அணியில் ரோஹித், இஷாந்த் போன்ற வீரர்கள் இல்லாமல் இருப்பது எங்களது பிரச்னை இல்லை. அவர்களுக்குப் பதில் யாரை இந்திய அணி தேர்வு செய்யப்போகிறது என்ற சவாலை கருத்தில் கொண்டு நாங்கள் அதற்காகத் தயாராகி வருகிறோம். 
எங்களது அணியிலும் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட் உள்ளிட்ட சிறந்த பெüலர்கள் உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். ஒருநாள் தொடருக்கான பிளேயிங் லெவனில் நிச்சயம் ஸ்டீவ் ஸ்மித் இருப்பார். அது தவிர வீரர்கள் தேர்வில் இன்னும் சில குழப்பங்கள் இருந்தாலும், அதன் முடிவுகள் நல்லதாகவே இருக்கும். 
கிரிக்கெட் தொடரின்போது இரு அணியினர் இடையே வார்த்தைப் போர் இருக்காது என நம்புகிறேன். சிறந்த இரு அணிகள் மோதும்போது அதில் வேடிக்கை பேச்சுகளுக்கு இடம் இருக்கும். சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது சில நேரங்களில் பதற்றம் ஏற்படுவதால் போட்டி உணர்வு காரணமாக சில வார்த்தைகள் வரலாம். எனினும், வார்த்தைப் போருக்கு இடமில்லை என்று ஜஸ்டின் லேங்கர் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT