ஐபிஎல்-2020

அடுத்த 3 உலகக் கோப்பை வரை விளையாட விருப்பம்

26th Nov 2020 06:41 AM

ADVERTISEMENT


சிட்னி: வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை இந்திய அணிக்காக விளையாட தாம் விரும்புவதாக ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் லோகேஷ் ராகுல் கூறினார். 
அடுத்த 3 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி, ஒருநாள் உலகக் கோப்பை போட்டி ஆகியவை அடுத்தடுத்து  நடைபெறவுள்ள நிலையில் லோகேஷ் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். 
ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கான சிறந்த விக்கெட் கீப்பராக லோகேஷ் ராகுல் உருவெடுத்துள்ளார். அவர் அணியில் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பெüலராகவும் பங்களிப்பு செய்கிறார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: 
விக்கெட் கீப்பராக இருந்துகொண்டு பேட்ஸ்மேன் அல்லது பெüலராகவும் இருப்பது அணிக்கான கூடுதல் பங்களிப்பாக இருக்கும். இந்திய அணிக்காக அவ்வாறு இரு பணிகளைச் செய்ய ஆர்வமுடன் இருக்கிறேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை போட்டிகள் வரை இந்திய அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன். 
எனினும், இதுவரை அணி நிர்வாகம் அதுதொடர்பாக என்னிடம் எதுவும் கூறவில்லை என்று லோகேஷ் ராகுல் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT