ஐபிஎல்-2020

ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே

26th Nov 2020 06:38 AM

ADVERTISEMENT

 

துபை,: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் கிரேக் பார்க்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
முன்னதாக அப்பொறுப்பிலிருந்த இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகரின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான தேர்தலில் கிரேக் பார்க்லே, சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் போட்டியிட்டனர். 
ஐசிசியின் காலாண்டு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அதன் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. அதற்கான மின்னணு வாக்குப்பதிவில் ஐசிசியின் 16 இயக்குநர்கள் வாக்களித்தனர். அதில் பார்க்லேவுக்கு 11 வாக்குகளும், கவாஜாவுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பார்க்லே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 
வெற்றிக்குப் பிறகு பேசிய பார்க்லே, "ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை எனக்களிக்கப்பட்ட கெüரவமாக உணர்கிறேன். எனக்கு ஆதரவளித்த ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி. இந்த கரோனா சூழலில் இருந்து கிரிக்கெட் விளையாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர நாம் இணைந்து பணியாற்றுவோம்' என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT