ஐபிஎல்-2020

காயத்திலிருந்து மீளும் ரித்திமான் சாஹா

DIN


சிட்னி: தொடைப்பகுதி காயத்திலிருந்து மீண்டுவரும் இந்திய விக்கெட்கீப்பர் - பேட்ஸ்மேன் ரித்திமான் சாஹா, சிட்னியில் புதன்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் அந்நாட்டு அணியுடன் மோதவுள்ளது. இதில் டிசம்பர் 17 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரித்திமான் சாஹாவும் சேர்க்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியின்போது அவரது இரு கால்களின் தொடைப்பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் சார்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய வெளியேற்றும் சுற்று மற்றும் 2}ஆவது தகுசிச்சுற்று ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்தது. 
எனினும், இந்திய அணியின் பிசியோ நிதின் படேல், உடற்தகுதியை மேம்படுத்தும் நிபுணர் நிக் வெப் ஆகியோர் ரித்திமான் சாஹா காயத்திலிருந்து மீள பணியாற்றி வருவதாகவும், எனவே முதல் டெஸ்டுக்கு முன்பாகவே ரித்திமான் சாஹா தயாராகிவிடுவார் என்றும் பிசிசிஐ தலைவர் செüரவ் கங்குலி கூறியிருந்தார். 
இந்நிலையில், சிட்னி மைதானத்தில் ரித்திமான் சாஹா வலைக்குள்ளாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு நுவன் சேனேவிரத்னே, தயானந்த கரானி ஆகியோர் பந்துவீசினர். பயிற்சியின்போது ரித்திமான் சாஹா எந்தவொரு அசெüகர்யத்தையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 
இதனால் அவர் காயத்திலிருந்து மீண்டுவருவதாகத் தெரிகிறது. எனினும் அவர் விக்கெட் கீப்பிங்கில் ஈடுபடவில்லை. சாஹா முழுமையாக மீண்டுவரும் பட்சத்தில் டெஸ்ட் தொடரில் அவரே விக்கெட் கீப்பராக நியமிக்கப்படலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT