ஐபிஎல்-2020

பாகிஸ்தான் சூப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் சாம்பியன்

DIN


கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லாகூர் காலந்தர்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது. 
கராச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த லாகூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கராச்சி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. 
லாகூர் அணியில் அதிகபட்சமாக தமீம் இக்பால் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்தார். கராச்சி தரப்பில் வகாஸ் மசூத், அர்ஷத் இக்பால், உமைத் ஆசிஃப் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
 கராச்சி இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்திய பாபர் ஆஸம் ஆட்டநாயகன் ஆனார். அவரே தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். லாகூர் தரப்பில் ஹரிஸ் ரெüஃப், தில்பர் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 
கராச்சி அணியின் இந்த முதல் சாம்பியன் பட்டத்தை, சமீபத்தில் மாரடைப்பால் காலமான கிரிக்கெட் நட்சத்திரம் டீன் ஜோன்ஸýக்கு அர்ப்பணிப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் வாசிம் அக்ரம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT