ஐபிஎல்-2020

ஆகஸ்ட் - செப்டம்பரில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்

DIN

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. அந்தப் போட்டிகளை ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து கண்டுகளிக்க அனுமதி வழங்கவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. 
அடுத்த ஆண்டு உள்நாட்டில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான தற்காலிக அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதன்படி, இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்டில் தொடங்குகிறது. 
அதற்கு முன் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 4 வரை நடைபெறவுள்ளது. அதேபோல் தலா 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 
இதில் ஒருநாள் தொடர் ஜூலை 8 முதல் 13 வரையிலும், டி20 தொடர் ஜூலை 16 முதல் 20 வரையிலும் நடைபெறவுள்ளன. அதையடுத்து ஆகஸ்டில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனிடையே, இங்கிலாந்து மகளிர் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுடன் மோதும் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது. 


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை

1}ஆவது டெஸ்ட்     ஆகஸ்ட் 4  முதல் 8 வரை    டிரென்ட் பிரிட்ஜ் 
2}ஆவது டெஸ்ட்    ஆகஸ்ட் 12 முதல் 16 வரை    லார்ட்ஸ் 
3}ஆவது டெஸ்ட்    ஆகஸ்ட் 25 முதல் 29 வரை    ஹெட்டிங்லி 
4}ஆவது டெஸ்ட்     செப்டம்பர் 2 முதல் 6 வரை    ஓவல் 
5}ஆவது டெஸ்ட்    செப்டம்பர் 10 முதல் 14 வரை    ஓல்ட் டிராஃபோர்டு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

SCROLL FOR NEXT