ஐபிஎல்-2020

காமன்வெல்த்தில் கிரிக்கெட்: ஐசிசி டி20 தரவரிசையின் முதல் 6 மகளிரணி தகுதி

DIN

துபை: ஐசிசியின் டி20 தரவரிசையில் முதல் 6 இடத்தில் இருக்கும் மகளிர் கிரிக்கெட் அணி 2022}ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக, இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் 2022}ஆம் ஆண்டு நடைபெறும் சீசனில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான கிரிக்கெட் அணிகளின் தகுதியை ஐசிசி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் புதன்கிழமை அறிவித்தன. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1}ஆம் தேதி நிலவரப்படி ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடத்தில் இருக்கும் மகளிர் கிரிக்கெட் அணிகள், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து தகுதிபெறும். தற்போதைய நிலையில் இந்திய மகளிரணி 3}ஆவது இடத்தில் உள்ளது. 
அது தவிர மீதமிருக்கும் ஒரு இடத்துக்கான அணியை தேர்வு செய்ய தகுதிப்போட்டி நடத்தப்படும் என்றும், அதவும் ஜனவரி 31, 2022}க்கு முன் நடத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. 
காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது இது 2}ஆவது முறையாகும். முன்னதாக கடந்த 1998}இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சீசனில் ஆடவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT