ஐபிஎல்-2020

ஆஸி. அணியிலிருந்து கேன் ரிச்சர்ட்சன் விலகல்

19th Nov 2020 03:56 AM

ADVERTISEMENT


சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை அணியில் இணைந்துள்ளார். 
கரோனா நோய்த்தொற்று சூழலில் தனது குடும்பத்தினருடனும், புதிதாகப் பிறந்த மகனுடனும் நேரம் செலவிட விரும்பி இந்த முடிவை மேற்கொண்டதாக ரிச்சர்ட்சன் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 
முதல் டெஸ்ட் நடைபெறவுள்ள அடிலெய்டில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ள நிலையில் ரிச்சர்ட்சன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக டெஸ்ட் போட்டி பாதிக்காமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்டில் இருந்து சிட்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முதல் டெஸ்ட் நடைபெறவுள்ள அடிலெய்டில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், அந்தப் போட்டியை பிரிஸ்பேனில் சிவப்பு நிற பந்துகொண்டு நடத்தினாலும் பிரச்னையில்லை என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸில்வுட் கூறினார். தற்போதைய நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் பகலிரவாக பிங்க் நிற பந்து கொண்டு விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT