ஐபிஎல்-2020

கரோனா அச்சம்: ஆஸி. வீரர்கள் சிட்னிக்கு மாற்றம்

DIN


சிட்னி: அடிலெய்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய வீரர்களை அங்கிருந்து சிட்னி நகருக்கு இடம் மாற்றியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். 
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்  பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வீரர்களை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரிலும் பங்கேற்க இருக்கும் வீரர்களும் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இதில் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன், மார்னஸ் லாபஸ்சாக்னே, மேத்தியூ வேட், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் உள்ளிட்டோரும் அடங்குவர். 
கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி தொடர்கள் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது. 
முன்னதாக அடிலெய்டில் கரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து டிம் பெய்ன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியும் அங்கு சென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT