ஐபிஎல்-2020

ஐபிஎல்: இறுதிச்சுற்று, தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்

11th Nov 2020 05:03 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன் மூலம் ஒரு கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆட்ட நாயகனாக போல்டும் தொடர் நாயகனாக ஆர்ச்சரும் தேர்வாகியுள்ளார்கள்.

ADVERTISEMENT

இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் இறுதிச்சுற்று ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றுள்ள வீரர்கள்

ஐபிஎல்: தொடர் நாயகன்

2008: வாட்சன் (ராஜஸ்தான்)
2009: கில்கிறிஸ்ட் (டெக்கான் சார்ஜர்ஸ்)
2010: சச்சின் (மும்பை)
2011: கெயில் (ஆர்சிபி)
2012: சுனில் நரைன் (கேகேஆர்)
2013: வாட்சன் (ராஜஸ்தான்)
2014: மேக்ஸ்வெல் (பஞ்சாப்)
2015: ரஸ்ஸல் (கேகேஆர்)
2016: கோலி (ஆர்சிபி)
2017: பென் ஸ்டோக்ஸ் (புணே)
2018: சுனில் நரைன் (கேகேஆர்)
2019: ரஸ்ஸல் (கேகேஆர்)
2020: ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

ஐபிஎல்: இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்

2008: யூசுப் பதான் (ராஜஸ்தான்)
2009: அனில் கும்ப்ளே (ஆர்சிபி)
2010: ரெய்னா (சிஎஸ்கே)
2011: முரளி விஜய் (சிஎஸ்கே)
2012: பிஸ்லா (கேகேஆர்)
2013: பொலார்ட் (மும்பை)
2014: மனிஷ் பாண்டே (கேகேஆர்)
2015: ரோஹித் சர்மா (மும்பை)
2016: பென் கட்டிங் (ஹைதராபாத்)
2017: கிருனாள் பாண்டியா (மும்பை)
2018: வாட்சன் (சென்னை)
2019: பும்ரா (மும்பை)
2020: போல்ட் (மும்பை)

Tags : IPL Jofra Archer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT