ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை: விவரங்கள்

10th Nov 2020 04:59 PM

ADVERTISEMENT

 

மும்பை - தில்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நிலையில், 5-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தில்லியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்குகிறது.

மேலும், ரோஹித் சர்மா இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. ஐந்து இறுதிச்சுற்றுகளில் விளையாடி ஐந்திலும் ரோஹித்துக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். பிறகு மும்பைக்காக 2013, 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்குப் பரிசுத்தொகையாக ரூ. 10 கோடி கிடைக்கவுள்ளது. தோல்வியடைந்து 2-ம் இடம் கிடைக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடி கிடைக்கும். பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்குத் தலா ரூ. 4.375 கோடி கிடைக்கவுள்ளது.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT