ஐபிஎல்-2020

தில்லிக்கு மீண்டும் ஒரு 'டக்', மும்பைக்கு மீண்டும் ஒரு விக்கெட்: முதல் ஓவர் கதை!

10th Nov 2020 08:04 PM

ADVERTISEMENT


13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும் தில்லி அணிக்கு மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த முறையும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் களமிறங்கினர்.

டிரென்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

லீக் சுற்றின் 2வது பகுதியில் தில்லியின் தொடர் தோல்விகளுக்கு தொடக்கம் மிக முக்கியக் காரணமாக இருந்து வந்தது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் உள்பட கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் (குவாலிபையர் 2 தவிர்த்து) தில்லிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. 

ADVERTISEMENT

ஏதேனும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஒற்றை இலக்கு ரன்களிலேயே தொடர்ச்சியாக வெளியேறி ஆட்டமிழந்து வந்தனர். இதில் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர். முதல் குவாலிபையர் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அவர்களுடன் 3-வது வீரராகக் களமிறங்கிய ரஹானேவும் டக் அவுட் ஆனார்.

இதன் காரணமாகவே, குவாலிபையர் 2-இல் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டாய்னிஸ் களமிறக்கப்பட்டார். அது பலனளித்தது. ஆனால், இம்முறை பலனளிக்கவில்லை. இந்த சீசனில் தில்லி அணி 9 முறை முதல் ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளது. இதில் 6 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர்.

மிரட்டும் போல்ட்:

இந்த சீசனில் தில்லிக்கு எதிராக விளையாடிய 4 ஆட்டங்களிலும் டிரென்ட் போல்ட் முதல் ஓவரிலேயே குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த சீசனில் போல்ட் பவர் பிளே ஓவர்களில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT