ஐபிஎல்-2020

மகளிர் டி20:  டிரெயில் பிளேஸர்ஸ் சாம்பியன்

10th Nov 2020 06:30 AM

ADVERTISEMENT


ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டிரெயில் பிளேஸர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஷார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி  பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த டிரெயில் பிளேஸர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனை தியேந்திரா டாட்டின் 20 ரன்களில் வெளியேறியபோதும், மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார். எனினும் எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே சேர்க்க 
முடிந்தது.

சூப்பர் நோவாஸ் தரப்பில் ராதா யாதவ் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மான்பிரீத் கெüர் 30 ரன்களும், சசிகலா ஸ்ரீவர்த்தனே 19 ரன்களும் எடுத்தனர். எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் சூப்பர் நோவாஸின் தோல்வி தவிர்க்க முடியாததானது. இதன்மூலம் ஹாட்ரிக் பட்டம் வெல்லும்  வாய்ப்பை இழந்தது சூப்பர் நோவாஸ்.

ADVERTISEMENT

டிரெயில் பிளேஸர்ஸ் தரப்பில் சல்மா கேட்டன் 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT