ஐபிஎல்-2020

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் ரோஹித் சர்மா

10th Nov 2020 06:25 AM

ADVERTISEMENT


புது தில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு வரும் ஜனவரியில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. அதனால் அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு நாடு திரும்ப விராட் கோலி அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார்.

இதேபோல் ரோஹித் சர்மாவுக்கு டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்த பிறகே அவருக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருடைய உடற்தகுதியை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் அணியில் சேர்க்கப்படுவார். அதேநேரத்தில் வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, சுஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி.நடராஜன்.

ஒருநாள் போட்டி அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ஷுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்).

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT