ஐபிஎல்-2020

அதிரடி ஷேன் வாட்சன்!

எழில்

அதிரடி பேட்ஸ்மேன்.

ஷேன் வாட்சன் பற்றி நினைக்கும்போது இந்த எண்ணம் தான் ரசிகர்களுக்கு ஏற்படும். புல் ஷாட், பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் பந்தைத் தூக்கி அடிப்பது, எப்போது வேண்டுமானாலும் சிக்ஸர் அடிப்பார் என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.... என வாட்சன் பல முத்திரைகளைப் பதித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

59 டெஸ்டுகள், 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடிய ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் கடந்த 2016 மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் போட்டியில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார் வாட்சன். 2008-ல் ராஜஸ்தானும் 2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸும் ஐபிஎல் பட்டங்களை வெல்ல முக்கியக் காரணமாக இருந்துள்ளார். 2008, 2013 ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டியில் 92 விக்கெட்டுகளை எடுத்துள்ள வாட்சன், ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2014-ல் ராஜஸ்தான் கேப்டனாக இருந்த வாட்சன், ஹைதராபாத் அணிக்கு எதிராக தவான், ஹென்ரிகஸ், கரண் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2018-ல் ஷேன் வாட்சனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்ல வாட்சன் முக்கியக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ள வாட்சன், 145 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் 43 ஆட்டங்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்

- 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்
- ஆஸ்திரேலிய அணியின் 44-வது டெஸ்ட் கேப்டன்
- 59 டெஸ்டுகள், 190 ஒருநாள், 58 டி20 ஆட்டங்கள் 
- 10,950 சர்வதேச ரன்கள்
- 2012 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த வீரர் 
- 2007, 2015 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் இடம்பெற்றார்.

ஐபிஎல் போட்டியில் ஷேன் வாட்சன்

- இருமுறை சாம்பியன் அணியில் இடம்பெற்றுள்ளார் (2008 ராஜஸ்தான் ராயல்ஸ், 2018 சிஎஸ்கே)
- 2008 மற்றும் 2013-ல் தொடர் நாயகன் விருதுகள்
- 145 ஆட்டங்கள்
- ராஜஸ்தான் ராயல்ஸ் (78 ஆட்டங்கள்), ஆர்சிபி (24), சிஎஸ்கே (43)
- 3874 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 137.91
- 92 விக்கெட்டுகள் & ஹாட்ரிக் விக்கெட்டுகள்
- 4 சதங்கள், 21 அரை சதங்கள்
- 52 vs தில்லி, 2008 அரையிறுதிச்சுற்று 
- 117* vs ஹைதராபாத், 2018 இறுதிச்சுற்று 
- 50 vs தில்லி 2019 தகுதிச்சுற்று.
- 80 vs மும்பை 2019 இறுதிச்சுற்று
- 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
- 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
- 2020 அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT