ஐபிஎல்-2020

ருதுராஜ் ஹாட்ரிக் அரைசதம்: பஞ்சாபை வெளியேற்றியது சென்னை!

1st Nov 2020 07:12 PM

ADVERTISEMENT


கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் பேட்டிங்: தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்கு

154 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளெஸ்ஸி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை சென்னைக்கு சூப்பர் தொடக்கம் தந்தது. குறிப்பாக டு பிளெஸ்ஸி அதிரடியாக ரன் குவித்தார். இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடி வந்த டு பிளெஸ்ஸி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களுக்கு கிறிஸ் ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

டு பிளெஸ்ஸி ஆட்டமிழந்தபோது வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 60 பந்துகளில் 70 ரன்கள் என ஓவருக்கு 7 ஆக இருந்ததால், பெரிதளவில் நெருக்கடி இல்லை. இதனால், அம்பதி ராயுடு மற்றும் ருதுராஜ் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.

ரவி பிஷ்னாய் வீசிய 16-வது ஓவரில் ருதுராஜ் பவுண்டரிகள் அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையை அடைந்தது. அதேசமயம், ருதுராஜும் தொடர்ந்து 3-வது அரைசத்தை எட்டினார்.

இதையடுத்து கிறிஸ் கெயில் வீசிய 18-வது ஓவரில் 5 ரன்கள் எடுத்த சென்னை அணி வெற்றியை உறுதி செய்தது.

18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்த சென்னை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் 49 பந்துகளில் 62 ரன்களும், ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்த தோல்வியின்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை பஞ்சாப் இழந்தது.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT