வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்: 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர் / ஐபிஎல்
நன்றி: டிவிட்டர் / ஐபிஎல்


ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. 

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தவான் மற்றும் ப்ருத்வி ஷா அதிரடி தொடக்கம்  தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சோதி பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ப்ருத்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்தில் 2 விக்கெட்டுகள் இழந்ததால் அந்த அணி சற்று திணறியது. 

ஆனால், கேப்டன் ஷ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பந்த் பதிலடி தரும் வகையில் விளையாடி நெருக்கடியை தளர்த்தினர். எனினும், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கோலின் இங்ரம் நிதானமாக விளையாட பந்த் துரிதமாக ரன் சேர்த்தார். வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6-க்கு கீழ் இருந்ததால் டெல்லி அணிக்கு மிகப் பெரிய அளவிலான நெருக்கடி இல்லை. இருப்பினும், இங்ரம் மற்றும் அடுத்தடுத்தாக களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழந்தனர். 

ஆனால், ரிஷப் பந்த் சிக்ஸர்கள் அடித்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம், பந்தும் தனது அரைசதத்தை எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 38 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்தார்.  

இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com